தனிமைப்படுத்தலை விட சுகாதார பாஸ் சிறந்தது! - Valérie Pécresse

தனிமைப்படுத்தலை விட சுகாதார பாஸ் சிறந்தது! - Valérie Pécresse
தனிமைப்படுத்தலுக்குள் இருப்பதை விட, சுகாதார பாஸ் நடைமுறை சிறந்தது  என மாகாண முதல்வர் தெரிவித்துள்ளார். 
 
இல் து பிரான்ஸ் மாகாண முதல்வரும், 2022 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளருமான Valérie Pécresse இதனை இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளார். "சட்டம் செயற்பட தொடங்கும் இடத்தில் சுதந்திரம் நிறைவடைகின்றது. நான் ஒருபோதும் சட்டத்துக்கு ஒத்துழைக்காமல் போகமாட்டேன். தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஆதரிக்கின்றேன். தனிமைப்படுத்தலுக்குள் இருப்பதை விட சுகாதார பாஸ் கொண்டு சுதந்திரமாய் இயங்குவதையே நான் தெரிவு செய்வேன்!" என Valérie Pécresse தெரிவித்துள்ளார். 
 
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பலர் இந்த சுகாதார பாஸ் நடைமுறைக்கு ஆதரவாத செயற்படுவது வரவேற்கத்தக்கது என இன்று காலை அரச ஊடக பேச்சாளர் Gabriel Attal தெரிவித்திருந்தார். Xavier Bertrand, Valérie Pécresse, Laurent Wauquiez போன்ற தலைவர்கள் தடுப்பூசி பிரச்சாரம் செய்வது வரவேற்கத்தக்கது. நாம் அனைவரும் இணைந்து தான் கொரோனா வைரசை அழிக்கவேண்டும் எனவும் Gabriel Attal மேலும் தெரிவித்தார்.
ஆசிரியர் - Editor II