மருத்துவமனையில் நோயாளிகள் அதிகரிப்பு! - கொரோனா வைரஸ் நிலவரம்..!!

மருத்துவமனையில் நோயாளிகள் அதிகரிப்பு! - கொரோனா வைரஸ் நிலவரம்..!!
கொரோனா வைரஸ் காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது. 
 
கடந்த 24 மணிநேரத்தில்  5,307 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று வீதம் இரண்டாவது நாளாக 4.2% வீதமாக இருக்கின்றது. இதுவரை பிரான்சில்  5,999.244  பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
ஞாயிற்றுக்கிழமை 6,843 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அடுத்த 24 மணிநேரத்தில் 607 பேர் புதிதாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குத் திரும்ப, சிலர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்ல தற்போது  7,079 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
952 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
அதேவேளை, கடந்த 24 மணிநேரத்தில் 45 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.  111,688 பேர் இதுவரை மொத்தமாக சாவடைந்துள்ளனர். அவர்களில்  85,183 பேர் மருத்துவமனைகளில் சாவடைந்தவர்களாவர். 
ஆசிரியர் - Editor II