70 மில்லியன் தடுப்பூசி அலகுகள்!!

70 மில்லியன் தடுப்பூசி அலகுகள்!!
70 மில்லியன் தடுப்பூசி அலகுகள் இதுவரை போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 
 
கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணி மிக விரைவாக இடம்பெற்று வரும் நிலையில், மொத்தமாக 70,369,538 அலகு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
40.264.973 பேர் தங்களது முதலாவது தடுப்பூசியினையும், 33.624.428 பேர் தங்களது இரண்டாவது தடுப்பூசியினையும் போட்டுக்கொண்டுள்ளனர். 
 
“நாங்கள் தொடருவோம்!”
 
நாட்டு மக்களில் கிட்டத்தட்ட 60% வீதமானவர்களுக்கு (40 மில்லியன் பேருக்கு) முதல் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். ’ஒன்றாய் இணைந்து வைரசை விரட்டுவோம்!’ என தெரிவித்த குறிப்பிட்ட மக்ரோன், தடுப்பூசி போடுவதை “நாங்கள் தொடருவோம்!” எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 
ஆசிரியர் - Editor II