தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மற்றுமொரு சலுகை!

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மற்றுமொரு சலுகை!
கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்த தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு மற்றுமொரு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கொரோனா தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர், தடுப்பூசி போட்டுக்கொண்டிருந்தாலும் அவர்களும் தனிமைப்படுத்தப்படுவார்கள் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் தற்போது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், PCR பரிசோதனைகள் எடுக்கப்பட்டு, அதில் எதிர்மறை முடிவு வந்தால் அவர் தனிமைப்படுத்திக்கொள்ள தேவையில்லை என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அனால் அவர் அடுத்த ஏழாவது நாள் மீண்டும் PCR பரிசோதனை எடுக்கவேண்டும் எனவும், அதில் நேர்மறை முடிவுகள் வந்தால் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, இந்த ஏழு நாள் வரை கட்டாயமாக பொது இடங்களுக்குச் செல்ல முகக்கவசம் அணியவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பொது சுகாதார இயக்குனநரகம் சற்று முன் இத்தகவலை வெளியிட்டுள்ளது. 


ஆசிரியர் - Editor II