சோம்ப்ஸ்-எலிசே அருகே நகைக்கடையில் கொள்ளை! - 3 மில்லியன் மதிப்புடைய நகை மாயம்!!

சோம்ப்ஸ்-எலிசே அருகே நகைக்கடையில் கொள்ளை! - 3 மில்லியன் மதிப்புடைய நகை மாயம்!!
பரிசில் நேற்று இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் ஒன்றில் மூன்று மில்லியன் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. 
 
நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இக்கொள்ளைச் சம்பவம் சோம்ப்ஸ்-எலிசேக்கு அருகே உள்ள  rue François Ier விதியில் உள்ள பிரபலமான நகைக்கடையில் இடம்பெற்றுள்ளது. இங்குள்ல Chaumet நகைக்கடைக்குள் மாலை 5 மணி அளவில் நுழைந்த ஆயுததாரி ஒருவன், அங்கிருந்த நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளான். 
 
கொள்ளையின் போது வன்முறை சம்பவங்கள் எதுவும் இடம்பெறவில்லை. கொள்ளையன் பின்னர் ஸ்கூட்டர் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றதாக அறிய முடிகிறது. இது தொடர்பான விசாரணைகளை பரிஸ் அரச வழக்கறிஞர் அலுவலகம் ஆரம்பித்துள்ளது. 
 
இதே கடை முன்னதாக 2019 ஆம் ஆண்டிலும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. அப்போது 1.9 மில்லியன் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
ஆசிரியர் - Editor II