தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடியில் உள்ள தனது வீட்டு முன்பாக போராட்டம் நடத்தினார்.

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படும், சமையல் கியாஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தரப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்து இருந்தது.

இந்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க. குற்றம் சுமத்தி உள்ளது.

தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தியும், தி.மு.க. அரசை கண்டித்தும் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க.வினர் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு முன்பு பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அறிவித்தனர்.

அதன்படி தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டின் முன்பு தி.மு.க. அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வலியுறுத்தி தி.மு.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இதே போல சேலம் மாநகரில் உள்ள 8 பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆசிரியர் - Editor II