அரவிந்த்சாமி படத்தின் புதிய அப்டேட்

அரவிந்த்சாமி படத்தின் புதிய அப்டேட்

2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரவிந்த்சாமியின் படம் பற்றிய புதிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

செல்வா இயக்கத்தில் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வணங்காமுடி’. இதில் சிம்ரன், நந்திதா ஸ்வேதா, ரித்திகா சிங், சாந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் 2017-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இப்படத்தில் அரவிந்த் சாமி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்த படம் குறித்த அப்டேட் நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்தது. தற்போது இப்படத்தை பற்றிய புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி ‘வணங்காமுடி’ படத்தின் டீசர் வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


ஆசிரியர் - Editor II