சுகாதார பாஸ் நடைமுறைக்கு வரும் திகதி அறிவிப்பு!!

சுகாதார பாஸ் நடைமுறைக்கு வரும் திகதி அறிவிப்பு!!
பல்வேறு சர்ச்சைகளுக்குப் பின் சுகாதார பாஸ் நடைமுறைக்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில், தற்போது திகதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வரும் ஓகஸ்ட் 9 ஆம் திகதி திங்கட்கிழமையில் இருந்து இந்த சுகாதார பாஸ் (Pass sanitaire) நடைமுறைக்கு வருவதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் இருந்து பொது இடங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகம், கஃபே விடுதிகள், மதுச்சாலைகள் தொடருந்து மற்றும் விமானங்கள் போன்ற இடங்களில் இந்த சுகாதார பாஸ் நடைமுறைக்கு வருகின்றது.
 
இன்று புதன்கிழமை பகல் இடம்பெற்ற அமைச்சர்களுக்கான சந்திபில் இது தீர்மானிக்கப்பட்டதாக அரச ஊடக பேச்சாளர்  Gabriel Attal சற்று முன்னர் அறிவித்தார். “சுகாதர பாஸ் நம் வாழ்க்கையை பாதுகாக்கும் அருமையான கருவி!” எனவும் அவர் தெரிவித்தார். 
ஆசிரியர் - Editor II