தடுப்பூசி நிலையத்தில் திருட்டு! - தடுப்பூசிகள் மாயம்!!

தடுப்பூசி நிலையத்தில் திருட்டு! - தடுப்பூசிகள் மாயம்!!
Val-de-Marne மாவட்டத்தில் உள்ள தடுப்பூசி நிலையத்தில் இருந்து பொருட்கள் திருடப்பட்டதால், இன்று காலை தடுப்பூசி நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. 
 
Limeil-Brévannes, (Val-de-Marne) நகரில் செஞ்சிலுவை சங்கத்தினால் நடத்தப்பட்டுவந்த குறித்த தடுப்பூசி நிலையத்திற்குள் நேற்று இரவு நுழைந்த சிலர், அங்கிருந்த பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். மடிக்கணனிகள், தடுப்பூசி பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த பெட்டிகளுடன் இரண்டு வாகனங்களும் திருடப்பட்டுள்ளன. எட்டு தடுப்பூசிகள் கொண்ட பெட்டி ஒன்றே திருடப்பட்டுள்ளது. 
 
இச்சம்பவம் தொடர்பில் Villeneuve-Saint-Georges  நகர குற்றவியல் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 


ஆசிரியர் - Editor II