கொரோனா வைரஸ் பதிவு! - தற்போதைய நிலவரம்!!

கொரோனா வைரஸ் பதிவு! - தற்போதைய நிலவரம்!!
கொரோனா வைரசின் நான்காம் அலையில், அதிகூடிய தொற்று நேற்று செவ்வாய்க்கிழமை பதிவாகியுள்ளது. 
 
இந்த 24 மணிநேரத்தில் 26,871  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று வீதம் 4.1% ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை பிரான்சில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை எட்டியுள்ளது. துல்லியமாக 6.026.115 பேருக்கு இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7.137 பேராக உள்ளது. திங்கட்கிழமை இந்த எண்னிக்கை 7.079 ஆக இருந்தது. அதேவேளை, தீவிர சிகிச்சைப் பிரிவில் 978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். மொத்த சாவு எண்ணிக்கை 111.725 பேராக அதிகரித்துள்ளது. இவர்களில் 85.211 பேர் மருத்துவமமனையில் சாவடைந்துள்ளனர். 
 
தற்போதைய தடுப்பூசி விபரங்களை இங்கே அழுத்துவதன் ஊடாக படிக்கலாம்!
ஆசிரியர் - Editor II