பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரை

பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று உரை

புதிய தேசிய கல்விக் கொள்கை பற்றி, மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று 'வீடியோ கான்பரன்சிங்' வழியாக கலந்துரையாடுகிறார்.

புதிய தேசிய கல்விக் கொள்கை 2020க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து, நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. 

இதையொட்டி, பிரதமர் மோடி, மாணவர்களுடன் இன்று கலந்துரையாடுகிறார்.
வீடியோ கான்பரன்சிங் வழியாக நடைபெற உள்ள இந்நிகழ்ச்சியில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள், ஆசிரியர்கள், புதிய கல்விக் கொள்கையை உருவாக்கிய குழுவினர், மத்திய கல்வி மந்திரி  தர்மேந்திர பிரதான் உட்பட பலர் பங்கேற்கின்றனர். அப்போது, கல்வித் துறையில் செயல்படுத்த பட உள்ள திட்டங்கள் பற்றியும், பிரதமர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor II