நிதி திருத்த சட்டவரைபின் திருத்தங்கள் உயர்நீதிமன்றில் சமர்ப்பிப்பு

நிதி திருத்த சட்டவரைபின் திருத்தங்கள் உயர்நீதிமன்றில் சமர்ப்பிப்பு

அரசாங்கத்தின் நிதி திருத்த சட்டவரைபில் செய்ய வேண்டிய திருத்தங்கள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் உயர் நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள அரசாங்கத்தின் நிதி திருத்த சட்டவரைபில் செய்ய வேண்டிய ஏழு திருத்தங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி உள்ளிட்ட பல தரப்பினர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர்.

ஆசிரியர் - Editor II