‘இளைய சூப்பர்ஸ்டார்’ ஆக தெலுங்கில் அறிமுகமாகும் தனுஷ்...

‘இளைய சூப்பர்ஸ்டார்’ ஆக தெலுங்கில் அறிமுகமாகும் தனுஷ்...

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள தெலுங்கு படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் நடித்துள்ள தனுஷ், அடுத்ததாக டோலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். அவர் நடிக்கும் முதல் தெலுங்கு படத்தை இயக்குனர் சேகர் கம்முலா இயக்க உள்ளார். 
இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இப்படம் தயாராக உள்ளது. 
இந்நிலையில், தனுஷ் நடிக்கும் தெலுங்கு படத்தை தயாரிக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம், நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் தனுஷுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. அதில் ‘இளைய சூப்பர்ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் தனுஷின் பெயர் குறிப்பிடப்பட்டு இருந்தது. 
ஏற்கனவே கடந்த 2016-ம் ஆண்டு ‘தொடரி’ படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போதே தனுஷை ‘இளைய சூப்பர்ஸ்டார்’ என்ற அடைமொழியுடன் அழைத்தனர். இதையறிந்த தனுஷ், ‘என் தகுதிக்கு மீறி என்னை புகழாதீர்கள்’ என கேட்டுக்கொண்டார்.
 இதையடுத்து தனுஷை அவ்வாறு அழைப்பதை நிறுத்தினர். இந்நிலையில், தற்போது அதே அடைமொழியுடன் தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர் - Editor II