தங்காலை நகர சபையின் புதிய தலைவர் பதவியேற்பு

தங்காலை நகர சபையின் புதிய தலைவர் பதவியேற்பு

தங்காலை நகர சபையின் புதிய தலைவர் W.P.ஆரியதாச பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முன்னிலையில் இன்று (29) முற்பகல் அலரி மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார்.

சமுத்திர பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்ற ஆலோசகரான ஆரியதாச மூன்று ஆண்டுகளுக்கு மேலாக நகரசபை உறுப்பினராக சேவையாற்றியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் தலைவர் ரவிது வெதஆராச்சி அக்கட்சியினால் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்புவதற்காக W.P.ஆரியதாச இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

ஆரியதாசவின் பதவியேற்பின்போது விமானச் சேவைகள் மற்றும் ஏற்றுமதி வலயங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் D.V.சானக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம், பிரதமரின் மேலதிக செயலாளர் சமிந்த குலரத்ன உள்ளிட்ட தங்காலை நகர சபை உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆசிரியர் - Editor II