உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது

உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரம்- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டது

சட்டசபை நூற்றாண்டு விழா, கருணாநிதி படத்திறப்பு விழா முடிந்ததும் உள்ளாட்சி தேர்தல் தேதி அட்டவணை வெளியாக வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது.

இந்த மாவட்டங்களில் செப்டம்பர் மாதம் 15-ந்தேதிக்குள்ளாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகளைத் தொடங்கி உள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பாக தேர்தல் ஆணைய அதிகாரிகள், பணியாளர்கள் ஆகியோருடன் மாநிலத் தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதைத் தொடர்ந்து ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குப்பதிவு சாவடிகளை உருவாக்குவதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

76 பக்கங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறையில் 35 பக்கங்களில் வாக்குச்சாவடி அமைப்பதற்கான அறிவுரைகள் கூறப்பட்டுள்ளது.ஆசிரியர் - Editor II