பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம் : விவாதத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு!

பூதாகரமாகும் பெகாசஸ் உளவு விவகாரம் : விவாதத்திற்கு எதிர்கட்சிகள் அழைப்பு!

பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் அல்லது மத்திய உள்துறை அமைச்சர் முன்னிலையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.

பெகாசஸ் உளவு விவகாரத்தில், நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் எதிர்கட்சிகள் தடுப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டிய நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், எதிர்கட்சிகள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை சீர்குலைக்கவில்லை. தங்கள் கடமையைத்தான் செய்கின்றன.

பெகாசஸ் உளவு விவகாரம், எங்களை பொறுத்தவரை தேசியம், தேசதுரோகம், சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். இது தனியுரிமை தொடர்புடையது.

நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளின் குரல் நசுக்கப்படுகிறது. பெகாசஸ் மென்பொருளை வாங்கினீர்களா? இந்தியர்களை உளவு பார்த்தீர்களா? என்றுதான் கேட்கிறோம்.

ஆசிரியர் - Editor II