பெண் காவல்துறை அதிகாரி மீது மோதிய பேருந்து ..

பெண் காவல்துறை அதிகாரி மீது மோதிய பேருந்து ..
பணிக்குச் சென்றுகொண்டிருந்த பெண் காவல்துறை அதிகாரி மீது பேருந்து மோதியதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார். 
 
பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இச்ச்சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.  rue de Dijon வீதியில் மின்சார ஸ்கூட்டர் ஒன்றில் குறித்த பெண் அதிகாரி பணிக்குச் சென்றுகொண்டிருந்துள்ளார். அப்போது அவர் பேருந்து ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானார். இந்த விபத்தில் நோயாளர் காவு வண்டி ஒன்றும் தொடர்புபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
விபத்தில் படுகாயமடைந்த காவல்துறை அதிகாரி Pitié-Salpêtrière மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் இருப்பதாக அறிய முடிகிறது. 
 
தற்போதுவரை விபத்து நிகழ்ந்ததற்குரிய காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 
ஆசிரியர் - Editor II