வடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ்

வடமாகாணத்திற்கு 20 அம்புலன்ஸ்
>வடக்கு மாகாணத்தில் 1990 இலக்க இந்திய அரசின் உதவின் கீழான அவசர நோயாளர் சேவைக்காக தற்போது 20 நோயாளர் காவு வண்டிகள் வடக்கு மாகாணத்திற்கு கிடைக்கவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இந்திய அரசின் நிதி உதவியில் எதிர்வரும் 21ம் திகதி வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கவுள்ள அவசர நோயாளர் காவு வண்டி சேவைக்காக தற்போது 20நோயாளார் காவு வண்டிகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த 20நோயாளர் காவு வண்டிகளும் தற்போது பொலிசாரின் கண்கானிப்பின் கீழேயே செயல்படும்.

இந்த 20 காவு வண்டிகளிற்குமான சாரதிகள் , உதவியாளர்கள் , மருத்துவ உதவியாளர்கள் என 82 பேர் வடக்கு மாகாணத்தில் இருந்து தேர்வு செய்யப்பட்டு இந்தியாவினால் பயிற்றுவிக்கப்பட்டு சேவைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். குறித்த சேவையின் ஆரம்ப நிகழ்விற்காக இந்தியன்

தூதுவர் பிரதமர் ஆகியோர் 21ம் திகதி யாழ்ப்பாணம் வரவுள்ள சூழலில் குறித்த நோயாளர் வண்டி சேவை இலங்கையில் ஏற்கனவே இரு மாகாணங்களில் சேவையில் உள்ளது. மூன்றாவது மாகாணமாக எமக்கு கிடைத்துள்ளது. இவ்வாறு கிடைத்துள்ள 20 நோயாளர் காவு வண்டிகளில் 7

வண்டிகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் 4 வண்டிகள் கிளிநொச்சி மாவட்டத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளதோடு ஏனைய 3 மாவட்டங்களிற்கும் தலா 3 வண்டிகள் வீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வீதி விபத்து மற்றும் வெளியில் ஏற்படும் அவசர பணிகளிற்கான

நோயாளர் சேவைகளையும் வைத்தியசாலையில் இருந்து ஏனைய வைத்தியசாலைக்குமான நோயாளர் காவு வண்டி சேவைநினை இதுவரை காலமும் வைத்தியசாலைகளே மேற்கொண்ட நிலையில் வடக்கு மாகாணத்தில் அதிக நோயாளர் காவு வண்டிப் பற்றாக்குறை கானப்பட்டது. இனி வரும் காலத்தில் குறித்த 20 நோயாளர் காவு

வண்டிகள் மூலம் வைத்தியசாலை தவிர்ந்த ஏனைய பாவனையில் ஈடுபடுவதனால் வைத்தியசாலைகளின் பணியும் ஓரளவு சீரடையும். என்றார்.

ஆசிரியர் - Editor II