சென்றாயன் சமையல் செய்யக்கூடாது! படிக்காதவர் - மோசமாக நடக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

சென்றாயன் சமையல் செய்யக்கூடாது! படிக்காதவர் - மோசமாக நடக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்

பிக்பாஸ் இரண்டாவது சீசன் தற்போது ஒரு மாதத்தை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. 32வது நாள் நடந்த சம்பவங்கள் இன்று ஒளிபரப்பப்பட்டது.

அதில் சென்றாயனை அனைத்து போட்டியாளர்களும் ஓரம்கட்டி மோசமாக பேசியுள்ளனர். காலையில் டீ வேண்டும் என வைஷ்ணவியிடம் அவர் கேட்க அது பெரிய பிரச்சனையில் போய் முடிந்தது.

மேலும் "சென்றாயனை குக்கிங் டீமில் சேர்க்க வேண்டும், அப்போது தான் அவருக்கு பிரச்சனை புரியும்" என மற்ற போட்டியாளர்கள் கூறும்போது மும்தாஜ் மட்டும் சென்ராயன் பற்றி மோசமாக விமர்சித்தார்.

"அவர் சமைத்தால் சுத்தமாக செய்யமாட்டார். அவர் பாத்ரூம் கழுவுவது ஓகே ஆனால் சமைப்பது செட் ஆகாது" என கூறியுள்ளார்.

ஆசிரியர் - Editor II