ஒவ்வொரு நாளும் ரூ.1200 கோடி - அமேசான்

ஒவ்வொரு நாளும் ரூ.1200 கோடி - அமேசான்

அமேசான் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஜெப் பெசோஸின் சொத்து மதிப்பு கடந்தாண்டில் ஒவ்வொரு நாளும் ரூ.1200 கோடி அளவுக்கு வருமானமாக வந்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார் ஜெப் பெசோஸ், இவரது சொத்து மதிப்பு 150 பில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

அதாவது 49 ஏழைநாடுகளின் ஜிடிபி(மொத்த உள்நாட்டு உற்பத்தி) மதிப்பை காட்டிலும் அதிகம்.

இரண்டாவது இடத்தில் உள்ள பில்கேட்ஸை விட, 56.7 பில்லியன் டொலர்கள் அதிகம் உள்ளது.

கடந்த 1998ம் ஆண்டு ஒரு பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த இவரது சொத்து மதிப்பு சுமார் 20 ஆண்டுகளில் 150 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது.

கடந்தாண்டில் மட்டும் ஒவ்வொரு நாளும் ரூ.1200 கோடி அளவுக்கு சொத்துமதிப்பு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆசிரியர் - Editor II