மருத்துவத்துறைக்கு கட்டாய தடுப்பூசி! - காலவரையற்ற வேலை நிறுத்தம்!

மருத்துவத்துறைக்கு கட்டாய தடுப்பூசி! - காலவரையற்ற வேலை நிறுத்தம்!
மருத்துவத்துறை கட்டாய தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ள நிலையில், மருத்துவ துறை காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. 
 
Marseille மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவத்துறையே இந்த வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது. Sud Santé மற்றும் CGT unions ஆகிய இரு தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 13.0000 ஊழியர்கள் வேலையை புறக்கணித்துள்ளனர். அத்துடன் நாளை மறுநாள் ஓகஸ்ட் 5 ஆம் திகதி இரண்டு ஆர்ப்பாட்டங்களையும் இவர்கள் முன்னெடுக்க உள்ளனர். 
 
வரும் செப்டம்பர் 15 ஆம் திகதியில் இருந்து மருத்துவத்துறையினருக்கு கட்டாய தடுப்பூசி போடப்படும் என ஜனாதிபதி மக்ரோன் அறிவித்துள்ள நிலையில், தடுப்பூசி போடாதவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட மறுப்பதுடன், கடமையாற்றவும் அனுமதி மறுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அறிவித்தார். 
 
இந்த நெருக்கடியை சமாளிக்கவே அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதக தொழிற்சங்கம் அறிவித்துள்ளது. 
ஆசிரியர் - Editor II