சமூகவலைத்தளங்கள் - இளைஞர்களைக் குறிவைக்கும் மக்ரோன்!!

சமூகவலைத்தளங்கள் - இளைஞர்களைக் குறிவைக்கும் மக்ரோன்!!

நேற்று திங்கட்கிழமையில் இருந்து எமானுவல் மக்ரேன், கொரோனாத் தடுப்பு ஊசி தொடர்பான சந்தேகங்களிற்கும், கேள்விகளிற்கும சமூக வலைத்தங்களில் பதிலளித்து வருகின்றார்.

இளையவர்களின் கேள்விகளிற்கு TikTok, Instagram ஆகியவற்றில் மக்ரோன் பதிலளித்து வருகின்றார்.

இது ஒரு கவர்ச்சிகரமான வேலை என்றும், நேரடிக் கோள்விகளைத் தவிர்த்து, சமூகவலைத்தளங்களில் பதிலளிப்பதன் மூலம், சில தேவையில்லாத விடயங்களைத் தவிர்ப்பதுடன், இளையவர்களுடன் ஒரு இறுக்கமான தொடர்பை எமானுவல் மக்ரோன் பேணுகின்றார் என்றும், இது சிறந்த இராஜதந்திரம் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

டீசேர்ட் அணிந்தபடி, தனது கொரோனத் தடுப்பு ஊசிப் பிரச்சாரத்தையும், இளையோர் மத்தியில் உள்ள சந்தேகங்களையும் எமானுவல் மக்ரோன் தீர்த்து வருகின்றார்.

ஆசிரியர் - Editor II