முகக்கவசம் அணிய வற்புறுத்திய தொடருந்து கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல்!

முகக்கவசம் அணிய வற்புறுத்திய தொடருந்து கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல்!
பரிசில் இருந்து நீஸ் (Nice) நகர் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தொடருந்து ஒன்றில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. 
 
குறித்த TGV தொடருந்தி பயணித்த பயணி ஒருவர் முகக்கவசம் அணிந்திருக்கவில்லை. SNCF நிறுவனத்தின் தொடருந்து கட்டுப்பாட்டாளர் ஒருவர் அவரை நெருங்கி, தயவு செய்து முகக்கவசம் அணிந்துள்ளுமாறு தெரிவித்துள்ளார். ஆனால் அவர் முகக்கவசம் அணிய மறுத்துள்ளார். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. முகக்கவசம் அணியாவிட்டால் தொடர்ந்து பயணிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு 135 யூரோக்கள் தண்டப்பணம் செலுத்த நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இப்போது ஆக்ரோஷமடைந்த பயணி, கட்டுப்பாட்டாளரை தாக்கியுள்ளார். பலதடவைகள் முகத்திலும், உடம்பில் பல இடங்களிலும் தாக்கியுள்ளார். 
 
பின்னர் தொடருந்து நிறுத்தப்பட்டு, தாக்குதலாளி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு Avignon-Courtine  நகர காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்டார். கட்டுப்பாட்டாளரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். 
 
தாக்குதல் நடத்திய நபர் பரிசைச் சேர்ந்த 35 வயதுடையவர் என அறிய முடிகிறது. செவ்வாய்க்கிழமை பகல் இச்சம்பவம் Avignon நகர் அருகே தொடருந்து பயணித்துக்கொண்டிருந்தபோது இடம்பெற்றுள்ளது. 
 
ஆசிரியர் - Editor II