அடுத்தவர்கள் பாதுகாக்கப்படுவதே சுதந்திரம்! - ஜனாதிபதி மக்ரோன்!

அடுத்தவர்கள் பாதுகாக்கப்படுவதே சுதந்திரம்! - ஜனாதிபதி மக்ரோன்!
அடுத்தவர்கள் பாதுகாக்கப்ப்டுவதே உண்மையான சுதந்திரம் என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளர். 
 
Fort Brégançon இல் தனது கோடை விடுமுறையை கழித்து வரும் ஜனாதிபதி மக்ரோன், சமூகவலைத்தளமூடாக தினமும் நாட்டு மக்களின் கேள்விக்கு பதிலளித்து வருகின்றார். ‘சுகாதார பாஸ்’ நடைமுறைக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விக்கு ஜனாதிபதி மக்ரோன் மிக நிதானமான தீர்க்கமான பதிலொன்றை அளித்துள்ளார். 
 
‘நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொள்வதால் உங்களது சுதந்திரம் பறிபோகிறது என நினைத்தால், நீங்கள் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். உங்களால் கொரோனா தொற்று அடுத்தவர்களுக்கு பரவுகின்றது. அடுத்தவர்களுக்கு ஆபத்தில்லாத சுதந்திரத்தை மட்டுமே நீங்கள் அனுபவிக்க முடியும். அடுத்தவர்கள் பாதுகாக்கப்படுவதே சுதந்திரம்!’ என ஜனாதிபதி குறிப்பிட்டார். 
 
நேற்றைய தினம் தலைநகர் பரிசில் திடீரென குவிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், pass sanitaire இற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்திருந்தார்கள். ‘சுதந்திரமாக நடமாடுவதற்கு உங்களுக்கு ஆவணங்கள் தேவையென்றால்… அதன் பெயர் சுதந்திரம் இல்லை!’ என அவர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது தெரிவித்திருந்தனர். 
 
அதற்கு பதில் சொல்லுவதாக இந்த ஜனாதிபதியின் காணொளி அமைந்துள்ளது. 
ஆசிரியர் - Editor II