இரு நாட்கள் மூடப்படும் ஈபிள் கோபுரம்!!

இரு நாட்கள் மூடப்படும் ஈபிள் கோபுரம்!!
இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களும் ஈஃபிள் கோபுரம் மூடப்படுகின்றது. 
 
நாளை ஞாயிற்றுக்கிழமை ஈஃபிள் கோபுரத்தில் பரிஸ் 2024 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் ‘கையளிப்பு’ நிகழ்வு இடம்பெற உள்ளது. அதன் ஒத்திகை நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது. அதையடுத்து, இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
 
இன்றும் நாளையும் நுழைவுச் சிட்டைகள் முன்பதிவு செய்தவர்களுக்கு 100 வீத இழப்பீடு வழங்கப்படும் எனவும், கட்டணங்கள் ஏதுமின்றி திகதியை மாற்றிக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் - Editor II