20.000 சதுரமீற்றருக்கு மேலுள்ள வணிக வளாகங்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம்!!

20.000 சதுரமீற்றருக்கு மேலுள்ள வணிக வளாகங்களுக்கு சுகாதார பாஸ் கட்டாயம்!!
நாளை திங்கட்கிழமை முதல் 20.000 சதுர மீற்றர் பரப்பளவுக்கு மேற்பட்ட அனைத்து வணிக வளாகங்களுச் செல்லவும் சுகாதார பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோன்று உணவகங்கள், கஃபே விடுதிகள், மதுச்சாலைகளுக்கும் இந்த சுகாதார பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய இடங்களுக்குச் செல்வோருக்கு சுகாதார பாஸ் இல்லை என்றால், 72 மணிநேரத்துக்குட்பட்ட எதிர்மறை முடிவுகளுடன் கூடிய PCR அறிக்கைகள் இருந்தால் போதுமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேவேளை, சுகாதார பாஸ் அல்லது PCR அறிக்கைகள் இல்லாதவர்களுக்கு €750 யூரோக்க்ள் தண்டப்பணம் அறவிடப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது €135 யூரோக்கள் தண்டப்பணமும், இரண்டாவது தடவைகள் அதே தவறை மேற்கொள்ளப்படும் போது €1500 யூரோக்களும், மூன்றாம் தடவை €3500 யூரோக்கள் தண்டப்பணமும், ஆறு மாத சிறைத்தண்டனையும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் - Editor II