ஆடம்பர கைக்கடிகாரங்களை குறிவைத்து திருட்டு! - பரிசில் இருவர் கைது!!

ஆடம்பர கைக்கடிகாரங்களை குறிவைத்து திருட்டு! - பரிசில் இருவர் கைது!!
ஆடம்பர கைக்கடிகாரங்களை குறிவைத்து திருட்டுக்களில் ஈடுபடும் இருவரை காவல்துறையினர் பரிசில் கைது செய்துள்ளனர். 
 
சனிக்கிழமை மாலை பரிஸ் முதலாம் வட்டாரத்தில், சந்தேகத்துக்கிடமான நடவடிக்கைகளில் இருவர் நடமாடுவரை பார்வையிட்ட காவல்துறையினர், அவர்களை இரகசியமாக பின் தொடர்ந்தனர். அவர்கள் இருவரும் முதியவர் ஒருவரிடம் கொள்ளையிட முயற்சித்தனர். அவரிடம் இருந்த 50.000 யூரோக்கள் மதிப்புடைய கைக்கடிகாரம் ஒன்றை அவர்கள் திருட முற்பட்டபோது, காவல்துறையினர் அவர்கள் மீது பாய்ந்துள்ளனர். 
 
rue Saint-Honoré வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் சில நிமிடங்கள் அங்கு பரபரப்பு நிலவியது. திருடர்கள் இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்றனர். 
 
கைக்கடிகாரம் முதியவரிடம் மீண்டும் கையளிக்கப்பட்டது. குறித்த கைக்கடிகாரத்தை 90.000 யூரோக்களுக்கு வாங்கியிருந்ததற்கான ஆவணம் அவரிடத்தில் இருந்ததை காவல்துறையினர் உறுதி செய்திருந்தனர். 


ஆசிரியர் - Editor II