பிரெஞ்சு தீவுகளுக்கு அனுப்பப்படும் மருத்துவ பராமரிப்பாளர்கள்!!

பிரெஞ்சு தீவுகளுக்கு அனுப்பப்படும் மருத்துவ பராமரிப்பாளர்கள்!!

பரிசில் இருந்து மருத்துவ பராமரிப்பாளர்கள் இரண்டு பிரெஞ்சு தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளனர். 
 
இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் பரிசில் இருந்து இரண்டு விமானங்களில் ஒன்று Guadeloupe தீவுக்கும் இரண்டாவது Martinique தீவுக்கும் செல்கின்றது. இதில் மருத்துவ உபகரணங்களோடு 240 பராமரிப்பாளர்கள் (soignants) செல்கின்றனர். இத்தகவலை சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. 
 
குறித்த இரு தீவுகளிலும் கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருகின்றது. அதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை சுகாதார அமைச்சர் Olivier Véran தெரிவிக்கையில், “தேசிய ஒருமைப்பட்டினை அறிவிக்கின்றேன். தலைநகர மருத்துவ உதவியாளர்கள் உதவிக்கு வருவார்கள்!” என உறுதியளித்திருந்தார். அதையடுத்தே இந்த பராமரிப்பாளர்களை தாங்கிய இரு விமானங்களும் இன்று புறப்படுகின்றது. 
ஆசிரியர் - Editor II