இசையமைப்பாளராக அறிமுகமாகும் ராஜேஷ் வைத்யா

இசையமைப்பாளராக அறிமுகமாகும் ராஜேஷ் வைத்யா

வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா, நிபுணன் பட இயக்குனர் அருண் வைத்யநாதன் இயக்கவிருக்கும் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார்.

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு நிபுணன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் அருண் வைத்யநாதன். 

இவர் கல்யாண சமையல் சாதம் என்ற படத்தை தயாரித்து இருக்கிறார். தற்போது இவர் குழந்தைகளை மையமாக வைத்து உருவாகவிருக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளார். அந்தப் படத்தின் மூலம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யா இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

இப்படம் குறித்து ராஜேஷ் வைத்யா கூறும்போது, ‘நான் படங்களில் நல்ல அறிமுகத்திற்காக காத்திருந்தேன். 

அருண் வைத்யநாதன் நெருங்கிய நண்பர் என்பதால், அவர் தனது படத்தின் கதையைக் கூறினார். 

கதை எனக்கு பிடித்திருந்தது. அப்போதுதான் அவர் என்னிடம் படத்திற்கு இசையமைப்பீர்களா? என்று கேட்டார்.

பாடல்கள் மற்றும் ரீ ரெக்கார்டிங்கிற்கு ஸ்கோப் இருப்பதாக நான் உணர்ந்த படம் இது. அதனால், நானும் அவருடைய சலுகையை உடனடியாக ஏற்றுக்கொண்டேன்’ என்றார்.


ஆசிரியர் - Editor II