உடனடியாக இஸ்லாம் அமைப்புகளைத் தடை செய்யுங்கள் - ஜனாதிபதி வேட்பாளர்!!

உடனடியாக இஸ்லாம் அமைப்புகளைத் தடை செய்யுங்கள் - ஜனாதிபதி வேட்பாளர்!!

Hauts-de-France பிராந்தியத்தின் தலைவரும், வலதுசாரி ஜனாதிபதி வேட்பாளருமான Xavier Bertrand «பிரான்சிற்கு உறுதியான தலைமை இல்லை» என இன்று வழங்கிய ஊடகச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.

«கடந்த ஐந்தாண்டுகளாக இஸ்லாம் விடயத்தில், எமானுவல் மக்ரோன் குழப்பமான ஒரு அப்பாவித்தனத்துடனே உள்ளார். அடிப்படைவாத இஸ்லாத்திற்கு எதிரான எந்த விதமான உறுதியான நடவடிக்கைகளையும் எடுக்கத் தவறி உள்ளார். பிரான்சிற்கான இஸ்லாத்தின் ஆபத்தினை எதிர்கொள்ளத் தவறி உள்ளார்»

«இன்று தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், பிரான்சிற்கான அச்சுறுத்தல் பெருமளவில் அதிகரித்துள்ளது. இதற்கான எந்த தீர்க்கமான முடிவுகளையும் எமானுவல் மக்ரோன் எடுக்கவில்லை»


«பிரான்சின் தகமைகளிற்கு அச்சுறுத்தலாகவும், எதிராகவும், பிரான்சிற்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொள்ளும், அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் உடனடியாக மூடப்படல் வேண்டும். அடிப்படைவாத இஸலாத்திற்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்»

எனவும் Xavier Bertrand கடுமையாகத் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II