65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு மூன்றாம் தடுப்பு ஊசி!!!

65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு மூன்றாம் தடுப்பு ஊசி!!!

இந்த இலையுதிர்கால் ஆரம்பத்தில் இருந்து, 65 வயதிற்கு மேற்பட்டவர்களிற்கும், ஆபத்தான பெரும் நோய் உள்ளவர்களிற்கும் மூன்றாவது கொரோனத் தடுப்பு உசிகள் போட ஆரம்பிக்கும்படி பிரான்சின் அதி உயர் சுகாதார அணையமான HAS (Haute autorité de santé) அனுமதி அளித்துள்ளது.

முக்கியமாகக் கொரோனத் தொற்று ஏற்பட்டால் உயிராபத்தான நிலையில் உள்ள, 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், பெரும் நோய்கள் உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியின்மை உள்ளவர்களிற்கு முதற்கட்டமாக மூன்றாவது தடுப்பு ஊசிகள் செப்டெம்பரில் இருந்து ஆரம்பிக்கப்படும் என பிரான்சின் சுகாதார அமைச்சர் ஒலிவியே வெரோன் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக வருட இறுதிக்குள் அடுத்த கட்டத்தில் உள்ளவர்களிற்கும் மூன்றாவது துடப்பு ஊசிகள் போடும் நிகழ்ச்சி நிரலும் அறிவிக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் - Editor II