கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா?

கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா?

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன், தற்போது தனுஷ், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகும் ‘மாறன்’ படத்தை இயக்கி வருகிறார்.

துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசூரன் ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் கார்த்திக் நரேன். இவர் சமீபத்தில் வெளியான நவரசா ஆந்தாலஜியில் ‘புராஜெக்ட் அக்னி’ என்கிற குறும்படத்தை இயக்கி இருந்தார். அரவிந்த்சாமி, பிரசன்னா, பூர்ணா நடிப்பில் வெளியாகி இருந்த இந்த குறும்படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஹாலிவுட் பட ரேஞ்சில் இருந்ததாக பாராட்டுக்களும் கிடைத்தன. 
தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் ‘மாறன்’ படத்தை இயக்கி வரும் கார்த்திக் நரேன், அடுத்ததாக நடிகர் அதர்வாவுடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐங்கரன் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மாறன் பட பணிகளை முடித்த பின் அதர்வா நடிக்கும் படத்தில் கவனம் செலுத்த கார்த்திக் நரேன் திட்டமிட்டு உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர் - Editor II