தீயணைப்புப்படை வீர்களை நிராகரித்த மனித உரிமைகள் நீதிமன்றம்!!

தீயணைப்புப்படை வீர்களை நிராகரித்த மனித உரிமைகள் நீதிமன்றம்!!
தீயணைப்பு மற்றும் அவரசமுதலுதவிப் படையினரான pompiers வீரர்களின் மனுவை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
தொழில்முறை மற்றும்  தொண்டடிப்படையிலான தீயணைப்புப் படைவீரர்கள் 672 பேர், பிரான்ஸ் அரசாங்கத்தின் கட்டாயக் கொரோனாத் தடுப்பு ஊசிச் சட்டத்தினை எதிர்த்து, 39வது சட்டப் பத்தியின் அடிப்படையில், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றமான CEDH (Cour européenne des droits de l’Homme) இல் வழக்குத் தொடுத்து இருந்தனர்.
ஆனால் இந்தக் கொரோனக்கால அவசரநிலை அடிப்டையில், இது 39வது சட்டப்பத்திக்குள் அடங்காது எனவும், 5 ஓகஸ்ட் 2021 ஆம் ஆண்டுச் சட்டப்படி, இவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், இந்த வழக்கினை நிராகரித்துள்ளது.
அவரசாலத்தின் ஆபத்தான நிலையில், சீர்செய்ய முடியாத ஆபத்தான நிலையில் உள்ளவர்கள், கட்டாயக் கொரோனாத் தடுப்பு ஊசியினைப் போடல் வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் - Editor II