பொலினேசித் தீவில் ஒரே நாளில் 25 மரணங்கள் !! நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!!

பொலினேசித் தீவில் ஒரே நாளில் 25 மரணங்கள் !! நிரம்பி வழியும் வைத்தியசாலைகள்!!
பிரான்சின் தீவக மாகாணங்கள் கொரோனாப் பெருந்தொற்றினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
தகித்தி தீவினை முக்கியமாகக் கொண்ட பிரெஞ்சுப் பொலினேசித் தீவுக் கூட்டத்தில் நேற்று (பிரான்ஸ் நேரப்படி இன்று) 25 பேர் கொரோனாவினால் சாவடைந்துள்ளனர்.
இதனைப் பிரெஞ்சுப் பொலினேசித் தீவுகளிற்கான சுகாதார அமைச்சர் ஜக் ரெய்னால் (Jacques Raynal) தெரிவித்துள்ளார். 
மிகவும் குறைவான சனத்தொகை உள்ள பிரெஞ்சுப் பொலினேசித் தீவுகளில் ஒரே நாளில் 25 பேர் சாவது பெருந்தொகையாகும்.
இங்கு தொற்று வீதமானது அதியுச்சமாகி 100.000 பேரிற்கு 3.357 பேர் என உள்ளது. பிரான்சின் நிலப்பரப்பில் சராசியாக இது 300 ஆகவே உள்ளது. அங்கு இது பத்து மடங்கிற்கும் அதிகமாக உள்ளது.
 
இங்கு மிகவும் குறைவான இடங்கள் கொண்ட வைத்தியசாலையில் 57 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவிலும், 321 பேர் சாதாரண பிரிவிலும் கொரோனாவிற்குச் சிகிச்சை பெறுகின்றனர்.
 
இது பிரெஞ்சுப் பொலினேசித் தீவுகளின் வைத்தியசாலைக் கொள்ளளவை விட பெருமளவு அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர் - Editor II