உதயநிதியின் படம் 9 விருதுகளுக்குப் பரிந்துரை!

உதயநிதியின் படம் 9 விருதுகளுக்குப் பரிந்துரை!

உதயநிதி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற சைக்கோ படம் 9 விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நடிகர் உதயநிதி ஸ்டாலின் மிஸ்கின் இயக்கத்தில் "சைக்கோ" படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் உதயநிதி பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக நடிக்க அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்திருந்தார்.

மேலும், நடிகை அதிதி ராவ் ஹைதாரி இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு ஜனவரி 24ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. க்ரைம் திரில் பாணியில் உருவான இப்படம் கலெக்ஷனில் நல்ல வசூல் ஈட்டியது.

இசைஞானி இளையராஜா இசையில் உருவான இப்படத்திற்கு பி.சி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான இப்படம் SIIMA 2020 விழாவில் 9 விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

முதன்முறையாக திரில்லர் படத்தில் நடித்திருந்த உதயநிதிக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைக்கலாம் என 

ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகின்றது 


ஆசிரியர் - Editor II