ஹிட் கொடுத்த இயக்குனருக்கு வாய்ப்புக் கொடுக்கும் ரஜினிகாந்த்!

ஹிட் கொடுத்த இயக்குனருக்கு வாய்ப்புக் கொடுக்கும் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்த் தனது 170 ஆவது படத்தை இயக்க முன்னணி இயக்குனர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.

நடிகர் ரஜினிகாந்த் இப்போது அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். இது அவரின் 168 ஆவது படம். இதையடுத்து அவர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இந்நிலையில் அவரின் 170 ஆவது திரைப்படம் பற்றிய சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த படத்தை அவருக்கு ஏற்கனவே ஹிட் கொடுத்த இயக்குனர் ஒருவருக்குதான் கொடுக்க உள்ளாராம். இந்த படத்தில் ரஜினிகாந்த் சமூகசேவகர் பாலம் கல்யாணசுந்தரமாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆசிரியர் - Editor II