திருமண வாழ்க்கையை விட எனக்கு சினிமா முக்கியம்:என்னால் சினிமாவை விட்டு விட்டு வாழ முடியாது! பிரபல நடிகை

திருமண வாழ்க்கையை விட எனக்கு சினிமா முக்கியம்:என்னால் சினிமாவை விட்டு விட்டு வாழ முடியாது! பிரபல நடிகை

சில வருடங்களுக்கு முன்பு இருந்த நடிகைகளே இப்போது அவர்களின் பழைய படியான ,மார்கெட் ஏதுமில்லாமல் சில சிறு சிறு படங்களில் நடித்து வர ஆரம்பித்து விட்டனர். ஆனால் அப்போது இருந்தே மார்கேட்டினை அப்படியே வைத்து கொண்டு இருக்கும் ஒரு நடிகை நயன்தாரா தான். அப்போது அப்படி முன்னணி நடிகைகளாக இருந்து வந்த நயன்தாராவிற்கு போட்டியாக இருந்து வந்த நடிகை தான் த்ரிஷா.

தமிழ் சினிமாவில் மொத்தமாக முன்னணி நடிகையாக இருந்து வந்தவர்கள் நயன்தாரா- த்ரிஷா அனுஷ்கா தான். அப்படி இருந்தவர்களில் இப்போது நயன்தாரா மட்டும் தான் இன்னுமே பல படங்களில் வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார். த்ரிஷா இப்போது மிக பெரிய படங்களில் அடிக்கடி நடித்து வராமல் சிறு சிறு புது முக இயக்குனர்களுடன் நடித்து வருகிறார். மேலும் நயன்தாரா போல அது அவர்களுக்கு கை கொடுக்கும் என நினைத்தார், ஆனால் அப்படி அவர்களின் படங்கள் பெரிய அளவில் எந்த ஒரு வரவேற்ப்பும் பெறவில்லை. இப்போது மீண்டும் சில பெரிய பட்ஜெட் படங்கள் நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவில் இருக்கும் மிக பெரிய ஜோடி படத்தில் துணை நடிகையாக அறிமுகமாகி, சூர்யாவின் மவுனம் பேசியதே படத்தின் மூலம், தமிழ் திரையுலகில் கதாநாயகியாக ஆனவர், நடிகை திரிஷா. அதைத்தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழி படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். தற்போது இவர் கைவசம், பொன்னியின் செல்வன், சதுரங்க வேட்டை 2,ராங்கி, கர்ஜனை ஆகிய படங்கள் உள்ளன த்ரிஷா இப்போது மிக பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ராங்கி, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் நடித்து வருகிறார்.
இப்படி இருக்கையில் முதன் முறையாக விளக்கம் கொடுத்து இருக்கும் த்ரிஷா, ‘எனக்கு தெரிந்தது சினிமாதான். எனக்கு எல்லாமே சினிமாதான். கடைசி மூச்சு உள்ளவரை நடித்துக் கொண்டே இருக்க ஆசை. ஹீரோயினாக இல்லாவிட்டாலும் குணசித்ர கேரக்டரிலாவது நடித்துக் கொண்டே இருப்பேன். திருமணம் செய்து கொள்ள விரும்பியது உண்மை. அது நிச்சயதார்த்தம் வரை சென்றது உண்மை. ஆனால் திருமணத்துக்கு பிறகு நடிக்க முடியுமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. அதற்கான வாய்ப்பு இல்லை என்பது தெரிந்தது. திருமண வாழ்க்கையை விட எனக்கு சினிமா முக்கியம். அதனால் திருமணத்தை ரத்து செய்து விட்டேன். என்னால் சினிமாவை விட்டு விட்டு வாழ முடியாது. என்கிறார் த்ரிஷா.
ஆசிரியர் - Editor II