பிக்பாஸ் பிரபலம் மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

பிக்பாஸ் பிரபலம் மாரடைப்பால் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி

சித்தார்த் சுக்லாவின் மறைவுக்கு ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மும்பையில் வசித்து வந்த பிரபல பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லாவுக்கு  இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 40. 

பல்வேறு இந்தி சீரியல்களில் நடித்துள்ள சித்தார்த் சுக்லா, 2014-ம் ஆண்டு வெளியான ‘ஹம்டி ஷர்மா கி துனியா’ படம் மூலம் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமானார். கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13-வது சீசனில் வெற்றிபெற்றதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். 
இதையடுத்து வெப் தொடர்களிலும், படங்களிலும் நடித்து வந்த அவர், திடீரென மாரடைப்பால் மரணமடைந்திருப்பது பாலிவுட் திரையுலகினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சித்தார்த் சுக்லாவின் மறைவுக்கு ரசிகர்களும், பாலிவுட் பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஆசிரியர் - Editor II