பேருந்து மீது சரமாரி துப்பாக்கிச்சூடு! - சாரதி அதிஷ்ட்டவசமாக உயிர் தப்பினார்..!!

பேருந்து மீது சரமாரி துப்பாக்கிச்சூடு! - சாரதி அதிஷ்ட்டவசமாக உயிர் தப்பினார்..!!

பொதுமக்கள் பேருந்து ஒன்றின் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு இச்சம்பவம் Sainte-Foy-lès-Lyon (Lyon (Rhône) நகரில் இடம்பெற்றுள்ளது. லியோன் நகரின் பொது போக்குவரத்து சேவையான TCL நிறுவனத்துக்குச் சொந்தமான பேருந்து ஒன்றே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளது. இரவு 9.45 மணிக்கு பயணிகள் எவரும் இல்லாமல் தரிப்பிடம் நோக்கி குறித்த பேருந்து பயணித்துக்கொண்டிருந்த நிலையில், Chemin des Razes பகுதியில் வைத்து, திடீரென இனம் தெரியாதவர்களால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

ஆயுததாரிகள் தப்பி ஓடிய நிலையில், அப்பகுதி ஜொந்தாமினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேருந்து சாரதி அதிஷ்ட்டவசமாக எவ்வித காயங்களும் இன்று தப்பினார். அவரது இருக்கையில் துப்பாக்கி குண்டு துளைத்திருந்தது. பேருந்து கண்ணாடிகளும் நொருங்கியிருந்தன.

சாரதி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்தில் இருந்து 12mm துப்பாக்கி ரவையின் கோதுகள் மீட்க்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் - Editor II