பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசியருக்கு ஜனாதிபதி அஞ்சலி! - மார்செ சுற்றுப்பயணம்!

பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்ட பேராசியருக்கு ஜனாதிபதி அஞ்சலி! - மார்செ சுற்றுப்பயணம்!

இன்று இரண்டாவது நாளாக மார்செயில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், பாடசாலை ஒன்றுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

மார்செயின் 13 ஆம் வட்டாரத்தில் உள்ள Bouge பாடசாலைக்கு சென்ற ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அங்கு ஆசியர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்தார். அவருடன் கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer மற்றும் நகர முதல்வர் Benoît Payan ஆகியோரும் உடனிருந்தனர்.

மாணவர்களை சந்தித்த ஜனாதிபதி மக்ரோன் ”கடந்தவருடம் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பேராசிரியர் Samuel Paty அவர்களை நினைவு கூர்ந்ததோடு, அவருக்கு அஞ்சலியும் செலுத்தினார்.

”இந்த தேசத்தில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்குமான பந்தம் எவ்வளவு நெருக்கமானது என்பதை நான் அறிவேன்!” என தெரிவித்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ”Samuel Paty என்றும் எமது நினைவில் இருப்பார்” எனவும் தெரிவித்தார்.  

ஆசிரியர் - Editor II