சுகாதார பாஸ் நடைமுறைக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டம்!

சுகாதார பாஸ் நடைமுறைக்கு எதிராக மீண்டும் ஆர்ப்பாட்டம்!

சுகாதார பாஸ் நடைமுறைக்கு எதிரான ஆர்ப்பாட்டம் மீண்டும் நாளை சனிக்கிழமை இடம்பெற உள்ளது.

தொடர்ச்சியான எட்டாவது வாரமாக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற உள்ளது. நாளை செப்டம்பர் 4 ஆம் திகதி கிட்டத்தட்ட 200 வரையான ஆர்ப்பாட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 135.000 இல் இருந்து 170.000 வரையானவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

பரிசில் 17.000 இல் இருந்து 27.000 பேர் வரை கலந்துகொள்ளக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

அண்மையில் Odoxa-Backbone நிறுவனம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் படி, பிரெஞ்சு மக்களில் 67% வீதமானவர்கள் சுகாதார பாஸ் (pass sanitaire) நடைமுறைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த எட்டு வாரங்களாக இடம்பெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டங்களும் வலுவிழந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.  

ஆசிரியர் - Editor II