மறைந்த நடிகர் Jean-Paul Belmondo-இற்கு தேசிய அஞ்சலி!

மறைந்த நடிகர் Jean-Paul Belmondo-இற்கு தேசிய அஞ்சலி!

புகழ்பெற்ற நடிகர் Jean-Paul Belmondo இன் மறைவை அடுத்து, ”தேசிய அஞ்சலி” நிகழ்விற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Invalides பகுதில் இந்த அஞ்சலி நிகழ்வு வரும் வியாழக்கிழமை செப்டம்பர் 9 ஆம் திகதி இடம்பெற உள்ளது. அரச அதிகாரிகள், முக்கிய தலைவர்கள் மற்றும் இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படும் Invalides பகுதியில், ஒரு சில முக்கிய பிரமுகர்களுக்கும் இங்கு அஞ்சலி செலுத்தப்பட்டுகின்றமை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நடிகர் Jean-Paul Belmondo இற்கான அஞ்சலி நிகழ்வும் இங்கு இடம்பெற உள்ளது.

பிரெஞ்சு சினிமாத்துறைக்கு இவரது மறைவு ஒரு அதிர்ச்சியாக உள்ளது. நேற்று திங்கட்கிழமை இவர் மறைந்ததை அடுத்து, பிரெஞ்சு தொலைக்காட்சிகள் பல தங்களது வழமையான நிகழ்ச்சிகளை மாற்றி இவரது “அற்புதமான” திரைப்படங்கள் பலவற்றை ஒளிபரப்பியிருந்தன.  

ஆசிரியர் - Editor II