கொரோனா வைரஸ் : 545 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன!

கொரோனா வைரஸ் : 545 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளன!

புதிய கல்வி ஆண்டு ஆரம்பித்து ஒரு வாரம் நிறைவடையும் நிலையில், தற்போது 545 வகுப்பறைகள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “இன்று நாம் 545 வகுப்பறைகளை மூடியுள்ளோம். மொத்த வகுப்பறைகளில் 0.1% வீதத்திற்கு சற்று அதிகமாகும். இது ஒரு முக்கியமான தரவு ஆகும். கடந்த ஆண்டை காட்டிலும் இது மேலான ஒரு முன்னேற்றமாகும்!” என கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றின் நான்காம் அலை நிறைவுக்கட்டத்தை நெருங்கி வரும் நிலையில், நாளாந்த தொற்றும் குறைந்து வருகின்றது. அதேவேளை மருத்துவமனை நோயாளிகளின் எண்ணிக்கையும் குறைவடைந்து வருகின்றது.

பிரான்சில் இதுவரை நாட்டு மக்களில் 73% வீதமானர்கள் தங்களது முதலாவது தடுப்பூசியினையும், 67.7% வீதமானவர்கள் தங்களது இரட்டை தடுப்பூசிகளையும் நிறைவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  ஆசிரியர் - Editor II