அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தேவையற்றது: பேராசிரியர் டேம் சாரா கில்பர்ட்!

அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தேவையற்றது: பேராசிரியர் டேம் சாரா கில்பர்ட்!

அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துவது தேவையற்றது என ஒக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பின்னணியில் உள்ள விஞ்ஞானி தெரிவித்துள்ளது.

பேராசிரியர் டேம் சாரா கில்பர்ட், டெய்லி டெலிகிராப்புக்கு அளித்த செவ்வியில், ‘சில பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு பூஸ்டர்கள் தேவைப்படும். ஆனால், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் நோய் எதிர்ப்பு சக்தி நீடிக்கும்’ என்று கூறினார்.

மேலதிக தடுப்பூசிகளை, இதுவரை தடுப்பூசி போடப்படாத நாடுகளுக்கு அனுப்பலாம் எனவும் அவர் யோசனை கூறியுள்ளார்.

பிரித்தானியா தடுப்பூசி ஆலோசனை அமைப்பு, விரைவில் பூஸ்டர் தடுப்பூசிகள் செலுத்துவது குறித்த இறுதி ஆலோசனையை வழங்க உள்ளது.

தடுப்பூசி மற்றும் நோய்த்தடுப்புக்கான கூட்டு குழு, ஏற்கனவே மூன்றாம் டோஸ் கடுமையாக பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது. இது பிரித்தானியாவில் அரை மில்லியன் மக்களுக்கு தேவைப்படுகின்றது.

ஆனால், அவர்களுக்கு இன்னும் பரவலாக தேவைப்படுகின்றதா? யார் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்யவில்லை.


ஆசிரியர் - Editor II