நெருக்கடியில் இருந்து விலகும் மருத்துவமனைகள்!!

நெருக்கடியில் இருந்து விலகும் மருத்துவமனைகள்!!

கொரோனா வைரஸ் காரணமாக பதிவாகும் நாளாந்த புதிய தொற்று மற்றும் சாவு எண்ணிக்கை விபரங்களை சற்று முன்னர் Santé publique France வெளியிட்டது.

நேற்று புதன்கிழமை மருத்துவமனையில் 10,438 நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று வியாழக்கிழமை இந்த எண்ணிக்கை 115 பேரால் குறைவடைந்து தற்போது 10.323 பேராக உள்ளது.

அதேவேளை, மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. நேற்று புதன்கிழமை 595 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இன்று 554 பேர் மாத்திரமே அனுமதிக்கப்பட்டனர்.

*****

தீவிர சிகிச்சைப் பிரிவில் 2,195 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று புதன்கிழமை இந்த எண்ணிக்கை 2,224 பேராக இருந்தது.

****

104 பேர் கடந்த 24 மணிநேரத்தில் சாவடைந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களக சாவு எண்ணிக்கை 100 இற்கும் மேல் பதிவாகின்றது. நேற்று புதன்கிழமை 100 பேர் சாவடைந்துள்ளனர்.

இதுவரை 88,620 பேர் மருத்துவமனையில் சாவடைந்துள்ளனர். மொத்தமாக 115,300 பேர் பிரான்சில் சாவடைந்துள்ளனர்.

******

கடந்த 24 மணிநேரத்தில் 10,969 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கடந்த வியாழக்கிழமை நாளாந்த தொற்று 15,911 பேருக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது.  

ஆசிரியர் - Editor II