ஜனாதிபதியை அறைந்தவருக்கு இன்று விடுதலை!

ஜனாதிபதியை அறைந்தவருக்கு இன்று விடுதலை!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை கன்னத்தில் அறைந்தவரை இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளான்.

கடந்த ஜூன் மாதம் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் Tain-l'Hermitage (Drôme) நகருக்கு பயணமாகியிருந்தபோது, Damien Tarel எனும் இளைஞன் கூட்டத்தில் நின்றுகொண்டு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனை கை நீட்டி கன்னத்தில் அறைந்தான். ஜூன் 8 ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவத்தின் போது, உடனடியாக அவன் கைது செய்யப்பட்டான்.

பின்னர் ஜூன் 10 ஆம் திகதி அவனுகு 18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று செப்டம்பர் 11 ஆம் திகதி சனிக்கிழமை அவன் Valence சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  
ஆசிரியர் - Editor II