ஓய்வூதிய சீர்திருத்தம் : கொரோனா விலகியதும் செயற்படுவோம்!

ஓய்வூதிய சீர்திருத்தம் : கொரோனா விலகியதும் செயற்படுவோம்!

நீண்ட கால பேசுபொருளான “ஓய்வூதிய சீர்திருத்தம்” (réforme des retraites) குறித்து இறுதியாக ஜனாதிபதி மக்ரோன் மனம் திறந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை Provence நகருக்கு விஜயம் மேற்கொண்டு, அங்குள்ள விவசாயிகள் பலரை சந்தித்து உரையாடினார். அதன்போது விவசாயில் ஒருவர் ‘ஓய்வூதிய சீர்திருத்தம்’ தொடர்பாக கேள்வி எழுப்பினார்.

“அனைவரது கருத்துக்களையும் கேட்டுவிட்டுத்தான் இதனை நாம் செயற்படுத்தவேண்டும். ஆனால் அதற்குள்ளாக வேறு சில ’முன்னுரிமையான’ பிரச்சனைகள் இங்கு உள்ளது. முகக்கவசத்தை அகற்றியதும் (*கொரோனா வைரஸ் விலகுவது) இது தொடர்பான விடயங்களில் கவனம் செலுத்துவோம்.

“நீங்கள் கவலைப்படவேண்டாம். நாங்கள் மிக திறமையாக செயற்பட்டு எமது ஓய்வூதியக்காரர்களை காப்பாற்றுவோம்!” எனவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் உறுதியளித்தார்.

ஆசிரியர் - Editor II