தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம்!

தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் முன்னேற்றம்!

நாட்டில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைய இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை கடந்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய, 10,406,048 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் இதுவரை 13,371,290 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அதேபோல், நேற்றைய தினத்தில் (11) மாத்திரம் 70260 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

மேலும், சைனோபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் நேற்று 119346 பேருக்கு போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இதுவரை 891,734 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரை 159,089 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும் 43,450 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

ஆசிரியர் - Editor II