கிறீசிற்குச் செல்லும் பிரான்சின் போர்விமானங்கள்!!...!

கிறீசிற்குச் செல்லும் பிரான்சின் போர்விமானங்கள்!!...!
கிறீசின் வான்படைக்கு மொத்தமாக, பிரான்சின் அதியுச்ச போர்விமானமான Rafale, 24 கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. 
இதன் முதற்கட்ட விமானங்கள், வருட இறுதிக்குள், கிறீசின் வான்பரப்பில் பறக்கும் என தசோ விமானத் தயாரிப்பு நிறுவனம் (Dassault Aviation) நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கட்டார், எகிப்து மற்றும் இந்தியாவிற்குப் பின்னர், முதன்முதலாக, பிரான்சின் Rafale போர்விமானங்கள், முதன்முறையாக ஐரோப்பிய நாடொன்றின் வான்படைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கிறீஸ் கடந்த ஜனவரியில் 18 Rafale பேர் விமானங்களிற்கான ஒப்பந்தத்தைச் செய்திருந்தது. தற்போது மேலும் 6 போர்விமானங்களிற்கான ஒப்ந்தங்களை செய்து, மொத்தமாக 24 போர்விமானங்களை பிரான்சிடம் இருந்த பெற உள்ளது.
இது ஐரோப்பிய வான்படையின் பலத்தினை மேலும் அதிகரிக்கும் என பிரான்சின் ஐரோப்பிய விவகாரங்களிற்கான அமைச்சர் Clément Beaune தெரிவித்துள்ளார்.
ஆசிரியர் - Editor II