70% மக்களிற்கு முழுமையான கொரோனாத் தடுப்பூசிகள்!!

70% மக்களிற்கு முழுமையான கொரோனாத் தடுப்பூசிகள்!!
பிரான்சில் கொரோனத் தடுப்பு ஊசிகளால் கொரோனத் தொற்று வீழ்சியடைவதுடன், கொரோனத் தடுப்பு ஊசிகள் போடாதவர்கள் மட்டுமே பாதிக்கப்டுவதாகவும் பிரான்சின் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
 
இந்நிலையில் பிரான்சின் மக்கள் தொகையில்  70 சதவீதமானவர்களிற்கு கொரோனாத் தடுப்பு ஊசிகள் முழுமையடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த 24 மணிநேரத்திற்குள் 56.436 கொரோனாத் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 
 
இதில் 17.018 பேரிற்கு முதற் தடுப்பூசி அலகுகளும், மற்றவர்களிற்கு முழுமையான தடுப்பு ஊசிகளும் போடப்பட்டுள்ன.
 
முழுமையான பிரான்சின் மக்கள் தொகையில், 73.0% பேரான 49.637.966 பேரிற்கு ஆகக் குறைந்தது முதலாவது தடுப்பு ஊசி அலகுளாவது போடப்பட்டுள்ளன.
 
அதே நேரம் பிரான்சின் மக்கள் தொகையில் 69.2% ஆன 46.668.941  பேரிற்கு கொரோனாத் தடுப்பு ஊசி அலகுகள் (schéma vaccinal complet) முற்றுப்பெற்றுள்ளன.
ஆசிரியர் - Editor II